நீதிமன்ற அறை நடுவிலே, வாதடிக்கொண்டுயருக்கும் போது மயங்கி விழுந்தார். அவர் இந்நாட்டின் முக்கியமான வழக்கறிஞர். தனது ஆடம்பரத்துக்கும், வழக்கு வெற்றிகளுக்கும், மிகவும் பேர்போனவர். நடந்ததை பார்த்து சற்று கதிகலங்கிப் போய் நின்றேன். ஸ்ரீதரன் தறையில் அடிபட்ட இளம் கன்றுபோல் வாயில் நுரைதள்ளி பாதி கண்கள் மூடிய நிலையில் நடப்பத்ரியாமல் கிடந்தார். அனைவரும், ஒரு கணம் முன் நடந்ததை கண்டு திகைத்து நின்றனர். அவசர சிகிச்சை பிரிவினர் மரடைப்புக்கான உடனடி நிவாரண முறையை கையாண்டனர். ஸ்ரீதரனுக்கு ஆறுதல் கூறியவாறே அம்புலன்ஸில் ஏற்றப்பட்டார்—அனால் அவர் காதில் ஒன்றும் கேட்டதுக்கான அறிகுறி ஒன்றுமில்லை.
எனக்கு ஸ்ரீதரனை 17 வருடங்களாக பழக்கம். அவரை, என் இளமையில், சட்டப்பயிற்சிக்காக மாணவனாக சேர்ந்தபோது முதலில் சந்தித்தேன். அவர், அப்பொழுதே அந்த அலுவலகத்தில் ஒரு நக்ஷத்திரமாக கருதப்பட்டார். இன்றும் அவர் மேஜையில் இருந்த கோட்பாடு நினைவில் இருக்கிறது. அந்த கோட்பாடு இங்கிலந்து முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் மொழிந்தது.
Sure I am that this day we are masters of our fate, that the task wich has been set before us is not above our strength; that its pangs and toils are not beyond my endurance. as long as we have faith in our own cause and an unconquerrable will to win, victory will not be denied us.
கண்டிப்பாக நம் விதி நம் வசமே. நம்முன் இருக்கும் பனி நம் சக்திக்கு மீரியதன்று; வேர்வை சிந்துவதும் வேதனையும் நம் மனதிடதுக்கு மீரியதன்று; நம் காரியத்தின் நோக்கத்தில் நம்பிக்கை இருக்கும்வரையில், மிளராத மனஉறுதியும் வேட்கையும் இருக்கும்வரையில், வெற்றி நமக்கு கிடைக்காமல் போகாது.
Thursday, 15 April 2010
முன்னுரை
திரு. ராபின் எஸ் ஷர்மா எழுதிய The monk who sold his ferrari என்னும் புத்தகத்தின் தமிழாக்கம் தான் இந்த தலைப்பு. இந்த தமிழாக்கம், தமிழ் அறிந்த மக்களக்கு சென்றடைய எண்ணி, உரிமையில் பெறாமலே இணைய தளத்தில் பதிப்பிக்கிறேன். இது சம்மந்தமாக ஆசிரியரை நான் அணுகவில்லை. ஏதேனும் ஆட்சேபனம் இருக்கும் பட்சத்தில், என்னை, skartykn@gmail.com என்னும் மின்னஞ்சலில் தொடர்புகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.
Subscribe to:
Posts (Atom)